ஹோமியோபதி- ஒரு இயற்கை மருத்துவ முறை
ஹோமியோபதி என்பது ஒரு முழுமையான, உள்ளிருந்து தூண்டும் ஒரு அற்புத மருத்துவ முறையாகும். குறிப்பாக, சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்பட்டுள்ள ஆரோக்கியப் பாதிப்பை உடல் ரீதியாக, மன ரீதியாக மற்றும் உணர்வுப்பூர்வமாக அணுகும் சிறந்த மருத்துவ முறையாக ஹோமியோபதி திகழ்கிறது.
ஒரு குறிப்பிட்ட உடல் உறுப்பை மீண்டும் சுயமாக செயல்பட வைக்கும் “தூண்டு செயலாக்க முறை” யை இந்த ஹோமியோபதி மருத்துவ முறை பயன்படுத்துகிறது.இதன் பிரதான நோக்கம் சம்பந்தப்பட்ட உடல் உறுப்பின் இயக்கத்தை அதன் இயற்கையான நிலைக்கு மீண்டும் கொண்டு வருவது அல்லது அதற்கு இணையான நிலையை அடையச் செய்வது. ஒரு உறுப்பின் இயற்கையான செயல்படும் தன்மைக்கு ஏற்ப அதன் இயக்கத்தை தூண்டி விடுவதும் ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பான வழிமுறைகளில் ஒன்று.
ஹோமியோபதி மருந்துகளை ஆன்லைனில் வாங்கவும்
ஹோமியோபதி மருந்துகள்
ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படை விதியின்படி, ஹோமியோபதி மருந்தாக மாற்றப்படும் எந்த ஒரு பொருளும், அதன் இயற்கை அமைப்பில் இருக்கும் சமயத்திலேயே ஹோமியோபதிப் பண்புகளை அதற்கு ஏற்படுத்தி தரும் பணியை, ஹோமியோபதி நுட்பத்தின் மூலம் மருந்தாளுநர் மேற்கொள்வார். அதன் பிறகே சம்பந்தப்பட்ட பொருள் ஹோமியோபதி மருந்தாக உருவெடுக்கிறது.
பின்விளைவுகள் இல்லாத ஹோமியோபதி
ஹோமியோபதி என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையில் இருந்து உருவானது. இயற்கையான, மறு சீரமைக்கும் திறன் கொண்ட தன்னிறைவான மருத்துவ முறை என்பதே இந்த வார்த்தையின் உள்ளடக்கமாக கூறப்படுகிறது. தற்போதைய அலோபதி மருத்துவ முறை (கெமிக்கல் மருந்துகள்) நடைமுறைக்கு வருவதற்கு முன்பு வரை, அனைத்து விதமான நோய்களுக்கும் தனித்துவமான முறையில் இயற்கையாக குணப்படுத்தும் நுட்பத்தையே ஹோமியோபதிச் செய்து வந்தது. எனினும், கெமிக்கல்-களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மருந்துகள் துரித கதியில் அசாதாரண விளைவுகளை ஏற்படுத்தியதால் அலோபதி மருத்துவ முறைப் பிரபலமடைந்தது. ஆனால், இந்த அலோபதி வேதி மருந்துகளைத் தொடர்ந்துப் பயன்படுத்துவதால் ஏற்படும் பின்விளைவுகள், ஹோமியோபதி மருத்துவ முறையின் மீதான மதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது என்பதையும் மறுக்க முடியாது.
தற்போதுள்ள மக்கள் மருந்து, மாத்திரைகள் தொடர்பாகச் சிறந்த விழிப்புணர்வுடன் இருப்பதும் ஹோமியோபதி மருத்துவத்தின் மீதான நன்மதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. குறிப்பாக, எந்த ஒரு மாத்திரையையும் கண்ணை மூடிக் கொண்டு விழுங்கி விட்டு, அதன் பின்னர் அது ஏற்படுத்தும் பின்விளைவுகளைச் சந்திக்க இந்தக் காலத்து மக்கள் விரும்புவதில்லை. தற்போதுள்ள மருத்துவர்களும் கூட, இதற்கு ஏற்றபடி தங்களின் மருந்துப் பரிந்துரையை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கின்றனர். இயற்கையான முறையில் பாதிப்புக்குத் தீர்வு அளிக்கக் கூடிய ஹோமியோபதி மருந்துகளையே நோயாளிகள் பலருக்கும் பரிந்துரை செய்கின்றனர். எந்தவித பின்விளைவுகளையும் தராத ஹோமியோபதி மருந்துகளை உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட நபர்களுக்குப் பரிந்துரை செய்வதற்குத் தயக்கம் கொள்வதில்லை.
ஹோமியோபதி மருத்துவ முறை எப்படி வேலை செய்கிறது:
ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவரான சாமுவேல் ஹனேமேன் (Samuel Hahnemann) என்பவர், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே, ஹோமியோபதி மருத்துவ முறையை எளிமையாக மாற்றினார். அதாவது, ஆங்கிலத்தில் ”Like Cures Like” என்ற பொருள்படும் முறையிலான ஒரு மருத்துவ முறையை உருவாக்கினார். நவீன மருத்துவ முறையில் இதனை ஸ்டிமுலேஷன் தெரபி (Stimulation Therapy) என்று சொல்கின்றனர். ஒவ்வொரு நோய்க்கும் உரிய மருந்து கொடுக்கும் போது அது குறிப்பிட்ட தூண்டலை (Stimulation) உருவாக்குவதைச் சாமுவேல் கண்டறிந்தார். இதன் மூலம் எந்தெந்த மாதிரியான நோய்களுக்கு எந்தெந்த ஹோமியோபதி மருந்துகளை கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகளையும் வகுத்தார். ஜெர்மனியின் Meissen பகுதியில் வளர்ந்த மருத்துவர் சாமுவேல், Erlangen-ல் தனது மருத்துவ பட்டத்தை 1779ம் ஆண்டு பெற்றார். அப்போதையக் கால கட்டத்தில் மருத்துவம் என்பது மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது. உடலை அறுத்து சிகிச்சை அளிப்பதும், பாதிக்கப்பட்ட நபருக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அறுவை சிகிச்சைக் காயம் குணமடையாமலேயே பலர் உயிரிழந்தனர். இத்தனை வலிகளை தாங்கிக் கொண்டு சிகிச்சை பெறும் நோயாளிகள், இறுதியில் உயிரிழப்பதை கண்டு மனம் வருந்திய மருத்துவர் சாமுவேல், கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு மருத்துவ முறையை உருவாக்க விரும்பினார். அதன் விளைவாக ஆதி காலம் தொட்டு வழக்கத்தில் இருந்து வந்த ஹோமியோபதி மருத்துவ முறையை, நெறிப்படுத்தினார். அதில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, புதிய விதிகளையும், பரிந்துரைகளையும் உருவாக்கிய பின்னர் பிரான்ஸ் நாட்டிற்கு இடம்பெயர்ந்த சாமுவேல், ஹோமியோபதி மருத்துவ முறையில் பல்வேறு புதிய மருந்துகளையும், மருத்துவ முறைகளையும் உருவாக்கினார். இதேபோல், வெவ்வேறு மருத்துவர்களும் ஹோமியோபதி மருத்துவ முறையில் பல ஆய்வுகளைச் செய்து, அதன் பலனை மேம்படுத்த முயற்சிகளை எடுத்ததன் விளைவாக, இன்று சிறந்த மருத்துவ முறையாக ஹோமியோபதி உலகெங்கும் மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
1700-களில் ஜெர்மனியில் மருத்துவர் சாமுவேல் மூலம் புதிய வடிவம் பெற்ற ஹோமியோபதி மருத்துவ முறை, 1825ம் ஆண்டு அமெரிக்காவில் Hans Burch Gram என்ற மருத்துவரால் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் 1835ம் ஆண்டு பென்சில்வேனியாவின் அலென்டவுன் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் ஹோமியோபதி மருத்துவ முறை மிகவும் பிரபலமடைந்துள்ளது. குறிப்பாக, ஹோமியோபதி மருத்துவ முறையைப் பயிற்றுவிக்கும் 120க்கும் அதிகமான கல்லூரிகளும் இந்தியாவில் உள்ளன. மூன்று முக்கிய விதிகளின் அடிப்படையில் ஹோமியோபதி மருத்துவ முறைப் பின்பற்றப்படுகிறது. அதாவது,
- 1) Law of Similars,
- 2) Law of Proving,
- 3) The Law of Potentization.
செடிகள், தாவரங்கள், கனிமங்கள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்படும் மூலப்பொருட்களைக் கொண்டு ஹோமியோபதி மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. ஆஸ்துமா, காய்ச்சல் மற்றும் ஒவ்வாமைப் போன்ற பாதிப்புகளுக்கு ஹோமியோபதி மருத்துவ முறைச் சிறந்தத் தீர்வாக இருந்து வருகிறது. ஒவ்வொருவரின் தனி நபர் உடல் திறனுக்கு ஏற்ப ஹோமியோபதி மருந்துகளும் மாற்றியமைக்கப்பட்டுத் தனித்துவமான முறையில் சிகிச்சை அளிக்கப்படும். அலோபதி மருத்துவர்கள் பலரும், சில ஹோமியோபதி மருந்தின் பலனை அறிந்து அவற்றை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கின்றனர். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் Nitroglycerine மாத்திரைகள்.
ஆன்லைனில் ஹோமியோபதி மருந்துகள்:
சரி… இப்போது மாத்திரைகள் என்று கூறியதும், ஆன்லைன் முறையில் அலோபதி மாத்திரைகள் கிடைப்பதுப் பற்றி உங்களுக்குச் சிந்தனை வரலாம். அதுபோல் ஹோமியோபதி மருந்துகள் ஆன்லைனில் கிடைக்குமா? என்ற சந்தேகமும் உங்களுக்கு வரக்கூடும். நீங்கள் சந்தேகப்படவே வேண்டியதில்லை. Homeomart நிறுவனம் 100% உண்மையான, தரமான ஹோமியோபதி மருந்துகளை ஆன்லைன் முறையில் வீடுகளுக்கே நேரடியாக டெலிவரிச் செய்து வருகிறது. இந்தியாவின் டாப் பிராண்டட் ஹோமியோபதி மருந்து நிறுவனமாகவும் Homeomart திகழ்கிறது. இந்தியாவில் தயாராகும் ஹோமியோபதி மருந்துகள் மட்டுமின்றி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் ஹோமியோபதி பிராண்டு மருந்துகளையும் நீங்கள் Homeomart நிறுவனம் மூலம் வீட்டிற்கே ஹோம் டெலிவரிப் பெற முடியும்.
நேரடி கொள்முதல்- குறைந்த விலை:
இந்தியாவின் அனைத்து முன்னணி ஹோமியோபதி மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உடன் நேரடித் தொடர்பு வைத்துள்ள Homeomart நிறுவனம், Indibuy என்றப் பதிவு பெற்ற ஆன்லைன் பார்மஸி நிறுவனம் மூலம் மருந்துகளை நேரடியாகக் கொள்முதல் செய்கிறது. அதிலும் குறிப்பாக, WHO மற்றும் GMP ஆகிய அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே ஹோமியோபதி மருந்துகளை Indibuy கொள்முதல் செய்கிறது.
ஆன்லைன் பரிவர்த்தனை பாதுகாப்பு:
ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்டத் தரவுகளைப் பாதுகாத்திடும் வகையில், EV SSL 256 bit encryption முறை மூலம் மட்டுமே ஆன்லைனில் பணம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வாடிக்கையாளர் வசதிக்காக NEFT, CARD, UPI, Wallet உள்ளிட்டவற்றின் மூலமாகவும் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் மட்டுமின்றி அமெரிக்க டாலர்கள், யூரோ நாணயம் மூலமாகவும் பணம் செலுத்தி மருந்துகளை பெற Homeomart இணையதளத்தில் சிறப்பு வசதிகள் உள்ளன.
This article is useful for following searches
ஹோமியோபதி என்றால் என்ன
நோய் தீர்க்கும் ஹோமியோபதி மருந்துகள்
ஹோமியோபதி மருந்து தயாரிப்பு
ஹோமியோபதி மருத்துவம்
what is homeopathy
ஹோமியோபதி மருத்துவம் நன்மைகள்
ஹோமியோபதி மருத்துவ முறை
ஹோமியோபதி மருத்துவம் pdf